பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு நமது The Life OF Children தொண்டு நிறுவனம் மூலம் வீடு கட்டித்தரப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி ஊராட்சி பூதனூர் கிராமம் காளியம்மன் கோயில் தெருவில் கேரளாவைச் சேர்ந்த சந்திரா என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக செங்கல் சூலையில் பணியாற்றி தனது மகள் தமிழரசி மற்றும் குழந்தைகளான சதீஷ் (10Age), தினேஷ் (8 Age) ஆகிய பேரன்களை பராமரித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் ஓலை குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீடு இயற்கை பேரிடர்கள் மற்றும் மழைக்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சந்திரா, மகள் தமிழரசி, தமிழரசியின் கணவர் மூர்த்தி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசி மூன்றாவது பிரசவத்தின் போது இறந்துவிட்டார். தமிழரசியின் கணவர் அத்துடன் குழந்தைகளை விட்டு சென்று விட்டார். குழந்தைகளை இதுவரை பாட்டி தனிகா பாத்துக் கொண்டு வந்தர், பூதனரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சந்திராவின் பேரன்களான சதீஷ் ஐந்தாம் வகுப்பும், தினேஷ் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு வீடு இல்லாததை அறிந்த பொறையாரில் உள்ள தி லைஃப் ஆஃப் சில்ட்ரன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் பிரபு தனது அறக்கட்டளை மூலம் புதியதாக வீடு அமைத்து கொடுத்துள்ளார். இதன் மூலம் பாட்டி சந்திரா மற்றும் பேரன்களுக்கு உரிய வசிப்பிடம் கிடைத்ததில் மன நிறைவடைகிறது தி லைஃப் ஆஃப் சில்ட்ரன்ஸ் அறக்கட்டளை Date : 15.12.2023
ஆதரவற்ற தாய் சரசு மற்றும் அவரது மகனுக்கு நமது The life of children Trust வீடு கட்டிதரப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் காளியப்பநல்லூர் ஊராட்சி, N. N. சாவடி மெயின் ரோடு சேர்ந்த ஆதரவற்ற சரசு மற்றும் அவரது மகனுக்கு The life of children தொண்டு நிறுவனம் மூலம் 21.07.2024. அன்று வீடு கட்டி தரப்பட்டது
Let’s join hands for